டெல்லி விமான நிலையத்தில் ரூ.338 கோடி போதைப்பொருள் பறிமுதல்

கோப்புப்படம்
கடந்த 6 மாதங்களில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 239 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் அரங்கேறுகிறது. இதனை தடுக்க விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி கடந்த 6 மாதங்களில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 239 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.338 கோடி ஆகும். அதேபோல் ரூ.25 கோடி மதிப்பிலான தங்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும் சுங்கத்துறை சட்டத்தை மீறியதால் 74 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுங்கத்துறை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






