அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் இரவு 9.59 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
திஸ்பூர்,
அசாமின் தரங் பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 9.59 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.22 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
EQ of M: 2.9, On: 22/10/2025 21:59:01 IST, Lat: 26.43 N, Long: 92.22 E, Depth: 10 Km, Location: Darrang, Assam. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/P4s1f9i3oO
— National Center for Seismology (@NCS_Earthquake) October 22, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





