சுற்றுலா கார் மீது பஸ் மோதி கோர விபத்து - 4 பேர் பலி

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா கார் மீது பஸ் மோதி கோர விபத்து - 4 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேற்று காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி, முருதேஷ்வரர் கோவில், மரவந்தி கடற்கரை, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண முட்டு உள்பட பகுதிகளுக்கு சென்றனர். இதனை தொடந்து தர்மஸ்தலாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தில் கர்கலா பஜகொலி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 3 மணியளவில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த ஆம்னி பஸ் சுற்றுலா கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை எஞ்சிய 9 பேரும் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com