புதுச்சேரி தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை

புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை
Published on

புதுச்சேரி,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற டிசம்பவர் 5-ந்தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய் வருகையையொட்டி புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், மாநில நிர்வாகி, தொகுதி தலைமை நிர்வாகிகள் மற்றும் அணித் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் தொகுதி வாரியாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று தொகுதி கிளை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து செயல்படும்படி ஆனந்த் அறிவுறுத்தினார்.

முன்னதாக புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com