பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பிரடொபி கிராமத்தை சேர்ந்த சிறுமி நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

கிராமத்திற்கு அருகே தேயிலை தோட்டப்பகுதியை கடந்து நடந்து சென்றுகொண்டிருந்த அந்த சிறுமியை பைக்கில் வந்த 3 இளைஞர்கள் கடத்தி சென்றனர். தேயிலை தோட்டத்திற்குள் கடத்தி சென்ற இளைஞர்கள் அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் செய்துள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் அவ்வழியாக சென்ற கிராமத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story