வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- பினராயி விஜயன்

கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வென்றுள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது: எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும். தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னோக்கி செல்வோம்.மதவாத சக்திகளின் தவறானதகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் இரையாகிவிட கூடாது என்பதை உறுதி செய்ய கூடுதல் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களின் இந்த தீர்ப்பு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இடதுசாரிகள் 45 ஆண்டுகளாக கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. பாலக்காடு திரிபுனிதுரா நகராட்சிகளையும் பாஜக வென்றுள்ளது.






