மிளகாய்ப்பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு 17 முறை ’பளார் அறை’ - வைரல் வீடியோ


மிளகாய்ப்பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு 17 முறை ’பளார் அறை’ - வைரல் வீடியோ
x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிபா பகுதியில் நகைக்கடை உள்ளது.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிபா பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்கு நேற்று இளம்பெண் வந்தார். முகத்தை மறைத்தவாறு நகைக்கடைக்கு வந்த அப்பெண் கடை உரிமையாளரிடம் நகை வாங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தான் மறைத்துக்கொண்டுவந்த மிளகாய்ப்பொடியை நகைக்கடை உரிமையாளரின் முகத்தின் அப்பெண் வீசிவிட்டு நகைகளை திருட முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட நகைக்கடை உரிமையாளர் அந்த பெண்ணை பிடித்து அவரது கண்ணத்தில் 17 முறை பளார்... பளார் என அறை விட்டார். பின்னர், அப்பெண்ணை பிடித்து நகைக்கடைக்கு வெளியே அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அப்பெண் நகைக்கடைக்காரர் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓட்டிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடைக்காரர் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story