விளம்பரத்திற்காக அவசர கதியில் விழா ஏற்பாடு - விஜயேந்திரா


விளம்பரத்திற்காக அவசர கதியில் விழா ஏற்பாடு  - விஜயேந்திரா
x
தினத்தந்தி 4 Jun 2025 7:44 PM IST (Updated: 4 Jun 2025 8:24 PM IST)
t-max-icont-min-icon

அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு மகுடத்தை சூடியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர்.

தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி கோலி பேருந்தில் அமர்ந்த நிலையில், பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று மாலை சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கவுரவிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் திரண்டனர்.

சின்னசாமி மைதானத்தில் கேட் நம்பர் 6,7,12,18 ஆகிய வாயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி வெற்றிப்பேரனி -கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மயக்கமடைந்துள்ளனர். பலர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பெங்களூருவில் ஒரே இடத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது,

ஆர்சிபி வெற்றி பேரணி உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பெங்களூரு துயர சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா முழு பொறுபேற்க வேண்டும்.

அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடக அரசு முன்னேற்பாடுகள் செய்யவில்லை. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்றார்.

1 More update

Next Story