ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு


ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 April 2025 6:29 PM IST (Updated: 20 April 2025 6:34 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து ஓடியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.

அதேபோல, செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

அதேபோல, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி-பனிஹால் இடையே பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன. ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story