அசாம், திரிபுராவில் கொட்டித்தீர்த்த கனமழை


அசாம், திரிபுராவில் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 23 April 2025 3:45 AM IST (Updated: 23 April 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் பெய்த கனமழையால் கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரத்தில் அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. திரிபுராவில் புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இடைவிடாத மழையால் செபாகிஜாலா, கோமதி மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. 49 மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் தலைநகரான அகர்தலா உள்பட பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோமதி மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். கோமதி, முஹுரி மற்றும் பெனி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

அசாமில் பெய்த கனமழையால் கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த மழையால் நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.

குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே அசாமில் இன்றும் (புதன்கிழமை) 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story