பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது; பிரதமர் மோடி பெருமிதம்

பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
ராமர் கோவில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் , ஆபரேஷன் சிந்தூர் என உறுதியளித்த அனைத்தையும் நான் நிறைவேற்றி வருகிறேன். பீகார் வரலாற்றில் முதல் முறையாக நேற்று அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
இந்த பெருமை பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளையே சாரும். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்க மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசே ராஷ்டிரிய ஜனதா தளத்தில் வாக்குறுதிகளை நம்பவில்லை
என்றார்.






