குஜராத் விமான விபத்து தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை

மீட்புப்பணிகள், சிகிச்சைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து உள்துறை மந்திரி அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விமான விபத்து குறித்து குஜராத் அதிகாரிகளிடம் அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அத்துடன், மீட்புப்பணிகள், சிகிச்சைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அமித்ஷா அகமதாபாத் விரைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story






