தெலுங்கானா: கோவிலில் சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் கட்டா மைசம்மா என்ற இந்து மத கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று நுழைந்த அல்தாப் (வயது 26) கோவில் உள்ள சாமி சிலை முன் சிறுநீர் கழித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அல்தாப்பை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அல்தாப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அல்தாப் கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






