நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல - நிதிஷ் குமார்


நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல - நிதிஷ் குமார்
x

பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,

சகோதர, சகோதரிகளே உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு 2005 முதல் வாய்ப்பு வழங்கினீர்கள். பீகாரியாக இருப்பது அவமானமாக பார்க்கப்பட்டது. அப்போது முதல் மக்களுக்காக இரவு, பகலாக உண்மையுடன் உழைத்து வருகிறோம். முந்தைய அரசுகள் பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் வலிமையான பெண்களை உருவாக்கியுள்ளோம். நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல. எங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தாருங்கள். இன்னும் அதிக வளர்ச்சியை கொண்டுவருவோம். அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பட்டியலில் பீகார் இடம்பெறும்

என்றார்.

1 More update

Next Story