போதை அதிகமானால் போலீசாரே வீட்டில் கொண்டு போய் விடுவார்கள்.. பெங்களூர் காவல்துறை அறிவிப்பு

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பெங்களூரு,
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக சென்னை, பெங்களூரு, ஐதாரபாத், மும்பை போன்ர பெருநகரங்களில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பெங்களூரில் இன்று பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மேலும் போதை அதிகமாகி நடக்க முடியாதவர்கள் பூத்களில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் முகவரி கேட்டு வீடுகளில் ‛டிராப்’ செய்யப்படுவார்கள் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பொருந்தாது. அளவுக்கதிகமான போதையில் தொடர்ந்து செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டுமே பொருந்தும் என்றும் பரேமஸ்வர் கூறினார். 15 இடங்களில் ஓய்வு எடுக்க இடம் அமைக்கப்படும் என்றும் போதையில் இருப்பவர்கள் அங்கு ஓய்வு எடுக்க வைக்கப்பட்டு போதை தெளிந்த பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்றும் கூறினார்.






