ரஷியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்


ரஷியாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டம்
x

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியா தனது வான் பாதுகாப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பை பயன்படுத்தி வருகிறது. சுதர்சன சக்ரம் என்று பெயரிடப்பட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுபடுத்தும் வகையில், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்காக ரஷியாவிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.

1 More update

Next Story