மிரட்டல்களுக்கு இந்தியா அடிபணியாது; முன்னாள் துணை ஜனாதிபதி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.
டெல்லி,
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
நமது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை நாம் பாதுகாப்போம். நமது தேசிய நலன் தொடர்பான விவகாரங்களில் நாம் உறுதியாக நிற்போம். மிரட்டல்களுக்கு அடிபணிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மிரட்டல்கள் இந்தியாவிடம் வேலை செய்யாது. இந்தியா தனது சொந்தக்காலில் நிற்கிறது
என்றார்.






