பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது - பிரதமர் மோடி திட்டவட்டம்


பயங்கரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது - பிரதமர் மோடி திட்டவட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2025 10:43 PM IST (Updated: 25 Aug 2025 10:58 PM IST)
t-max-icont-min-icon

அகமதாபாத், நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என பிரதமர் மோடி பேசினார்.

அகதாபாத்,

குஜராத் மாநிலம் அகதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது;

சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட அரசு ஒருபோதும் விடாது. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், தாங்கும் வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். எவ்வளவு அழுத்தம் வந்தாலும், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.

பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், இந்தியா விட்டுவைக்காது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பழி வாங்கியது என்பதை உலகம் கண்டது. பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் பாதுகாப்பு படையினர் அழித்தார்கள்.

நாங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உள்ளே சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். குஜராத்தில் அனைத்து வகையான தொழில்களும் விரிவடைந்து வருகின்றன. நமது மாநிலம் உற்பத்தி மையமாக மாறியிருப்பதைக் கண்டு முழு குஜராத்தும் பெருமை கொள்கிறது. அகமதாபாத், நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும்.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

1 More update

Next Story