'பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது' - மத்திய மந்திரி அமித்ஷா


பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது - மத்திய மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 23 April 2025 2:53 PM IST (Updated: 23 April 2025 5:37 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தினேன். பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது. இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை நிச்சயம் தப்பவிடமாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story