வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்


வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
x

பட்டாசு வெடித்து, இனிப்புகளை பகிர்ந்தும் இந்திய ராணுவத்தினர் தீபாவளியை கொண்டாடினர்.

கொல்கத்தா,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து, இனிப்பு, பலகார வகைகளை அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து, கோவில்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.

இந்த நிலையில், எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தினர், இனிப்புகளை பகிர்ந்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில், வங்கதேசத்தை ஒட்டிய எல்லைப்பகுதியான தக்‌ஷின் தினாஜ்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினர், பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

1 More update

Next Story