ஐதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை விமானி மீண்டும் திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்குமுன் சுமார் 30 நிமிட நேரம் விமானம் நடுவானில் வட்டமடித்துள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டு அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related Tags :
Next Story






