தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி; ரெயிலை கவிழ்க்க சதியா? - உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

சாமர்த்தியமாக செயல்பட்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்திம் ஷாம்லி மாவட்டத்தில் டெல்லி-சஹரன்பூர் ரெயில் பாதை உள்ளது. இந்த பாதையில் பால்வா கிராமத்திற்கு அருகே ரெயில் வந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்பு கம்பி வைக்கப்பட்டு இருப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






