பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை

டெல்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலையடுத்து,எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் நிலவும் சூழல் மற்றும் தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், இன்று மதியம் 3 மணிக்கு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






