ஜம்மு காஷ்மீர்: சட்டசபை வளாகத்தில் திடீர் தீ விபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்,
ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






