கேரளா - பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்

முன்னதாக ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
திருவனந்தபுரம்,
நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு தொகுதி எம்எல்ஏ.வும் கேரள முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூத்ததில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
ராகுல் மம்கூத்தத்தில் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, இன்று அவரை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
முன்னதாக ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்போது அவரது கட்சி உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் பறித்துள்ளது.
Related Tags :
Next Story






