கேரள உள்ளாட்சி தேர்தல்: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நிஜ கதாநாயகன் தோல்வி


கேரள உள்ளாட்சி தேர்தல்: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நிஜ கதாநாயகன் தோல்வி
x

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரன் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (வயது 46). இவர் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார். அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இந்த சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது.

இதை மையமாக வைத்தே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் எடுக்கப்பட்டு மிக பெரிய வெற்றி பெற்றது. இவர்தான் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் சுபாஷ் என்ற கதாபாத்திரத்தின் நிஜ நாயகன் ஆவார்.

இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார். தற்போது முடிந்த வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.

1 More update

Next Story