மத்திய பிரதேசம்: கால்வாயில் கார் விழுந்து விபத்து - 3 பேர் பலி


மத்திய பிரதேசம்: கால்வாயில் கார் விழுந்து விபத்து - 3 பேர் பலி
x

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அமில்கி கிராமம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தனர். அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது செல்லும் சாலையில் வேலை நடந்து கொண்டிருந்ததால் மாற்று பாதை வழியாக கார் சென்றது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சற்றும் எதிர்பாராத வகையில் அருகே உள்ள கால்வாயில் விழுந்தது. இதில் காரில் இருந்த கிரிஷ் கட்டிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்ற 4 பேர் பலத்த காயங்களுடன் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ராஜ் கட்டிக் மற்றும் ராஜக் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த இருவரின் நிலை மோசமாக உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story