மத்தியபிரதேச மந்திரியின் உதவியாளர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்


மத்தியபிரதேச மந்திரியின் உதவியாளர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 23 Jun 2024 3:22 PM IST (Updated: 23 Jun 2024 4:15 PM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேச மந்திரியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநில பாஜக அரசில் மந்திரியாக செயல்பட்டுவருபவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவரது உதவியாளர் மோனு கல்யாணி. இவர் இந்தூர் நகர் பாஜக இளைஞரணி துணைத்தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், இந்தூரில் நடைபெற உள்ள பா.ஜ.க. கூட்டம் தொடர்பான போஸ்டர்களை இன்று அதிகாலை மோனு கல்யாணி தனது ஆதரவாளர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மோனு கல்யாணி மீது சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மோனு கல்யாணியை ஆதரவாளர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மோனு கல்யாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மோனு கல்யாணியை சுட்டுக்கொன்றது அதேபகுதியை சேர்ந்த பியூஷ், அர்ஜுன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story