மனைவி, குழந்தைகளை கொன்று இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, குழந்தைகளை கொன்று இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் பர்டாஹி கிராமத்தை சேர்ந்த இளைஞர் வீரேந்திரா (வயது 30). இவரது மனைவி ஆர்த்தி குமாரி (வயது 26). இந்த தம்பதிக்கு ராஹி (வயது 4) என்ற மகளும், வீரஜ் குமார் (வயது 2) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் வீரேந்திராவின் வீடு பூட்டியே இருந்தது. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குடும்பத்தினர் 4 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். விசாரணையில் மனைவி, 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற வீரேந்திரா பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, குழந்தைகளை கொன்று வீரேந்திரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com