புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு


புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு
x

மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்

புதுவை,

கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கியூஆா் குறியீடு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், இடுப்பில் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகி மருத்துவர் பிரபுவின் தனி பாதுகாவலர் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story