ஜம்முவில் மாரத்தான் போட்டி; எல்லை பாதுகாப்பு படை நடத்தியது


ஜம்முவில் மாரத்தான் போட்டி; எல்லை பாதுகாப்பு படை நடத்தியது
x

பல ஓட்டப்பந்தய வீரர்கள் தேசிய கொடிகளை ஏந்தி இந்தியாவையும், எல்லை பாதுகாப்பு படையையும் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.

ஜம்மு,

எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) 60-வது நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில் ஜம்முவில் இளைஞர்களிடையே உடல் தகுதி மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், மாணவர்கள், மக்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது.

இதில் இந்தியா முழுவதும் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ. ஓட்டத்துக்கு பதிவு செய்து கலந்து கொண்டனர். சில வெளிநாட்டினரும் மாரத்தானில் பங்கேற்றனர்.

பல ஓட்டப்பந்தய வீரர்கள் தேசிய கொடிகளை ஏந்தி இந்தியாவையும், எல்லை பாதுகாப்பு படையையும் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். இந்த போட்டியை எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் இந்த மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்ததுடன் ஓட்டத்தில் பங்கேற்றார்.

1 More update

Next Story