காசாவில் போர் நிறுத்தம்: டிரம்பின் அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இஸ்ரேல் வசமிருந்த பாலஸ்தீன கைதிகள் சுமார் 2 ஆயிரம் பேரும் விடுவிக்கப்பட உள்ளனர்.
புதுடெல்லி,
காசாவில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஹமாஸ் வசமிருந்த மீதமுள்ள 20 இஸ்ரேல் பணயக்கைதிகளும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மறுபுறம் இஸ்ரேல் வசமிருந்த பாலஸ்தீன கைதிகள் சுமார் 2 ஆயிரம் பேரும் விடுவிக்கப்பட உள்ளனர்.
மேலும் காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் எகிப்தில் அமைதி மாநாடும் நடந்தது. இதில் பல்வேறு சர்வதேச தலைவர்கள் பங்கேற்று அந்த பிராந்தியத்தின் அமைதிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘2 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது அவர்களின் குடும்பத்தினரின் தைரியத்துக்கும், ஜனாதிபதி டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் ேநட்டன்யாகுவின் வலிமையான உறுதிக்கும் ஒரு வெகுமதியாக அமைந்துள்ளது’ என குறிப்பிட்டு உள்ளார்.






