புது மனைவியை தவிக்கவிட்டு 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் வாலிபர் ஓட்டம்

முதல் மனைவியை காட்டிலும் நிர்மலாவுடன் நவீன் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் நவீன் (28) இவருக்கு கசல்பூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 16-ம் தேதி திருமணம் நடந்தது. ஹபீஸ் போர் போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக வேலை செய்து வருபவர் நிர்மலா (34) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நிர்மலாவுடன் நவீனுக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் திருமணமான 2-வது நாளில் மனைவிக்கு தெரிய வந்தது. இதனை மனைவி கண்டித்து வந்தார். இருப்பினும் நிர்மலாவுடன் உள்ள தொடர்பு துண்டிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி நிர்மலாவுடன் நவீன் ஓட்டம் பிடித்தார். அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு முதல் மனைவியை நிர்மலாவுடன் தங்க வைத்தார். முதல் மனைவியை காட்டிலும் நிர்மலாவுடன் நவீன் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் ஒரே வீட்டில் இவர்கள் உல்லாசமாக இருப்பது முதல் மனைவிக்கு பிடிக்கவில்லை. இது குறித்து நவீன் மீது பாபு காத் போலீசில் புகார் செய்தார். மனைவி தன்மீது போலீசில் புகார் அளித்ததை தெரிந்துகொண்ட நவீன் நிர்மலா மற்றும் அவரது 3 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






