ம.பி.: திருடர்கள் என கூறி சிறுவர்களை தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை; 3 பேர் கைது


ம.பி.:  திருடர்கள் என கூறி சிறுவர்களை தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை; 3 பேர் கைது
x

மத்திய பிரதேசத்தில் சிறுவர்களை தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை செய்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் பந்தூர்னா மாவட்டத்தில் மோகாவன் பகுதியில், சிறுவன் ஒருவனை சிலர் பிடித்து, தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை செய்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதில் அந்த சிறுவன் கைக்கடிகாரம் மற்றும் பிற பொருட்களை திருடி விட்டான் என சிலர் கூறுவது வீடியோவில் கேட்கிறது.

இதனை தொடர்ந்து மற்றொரு சிறுவனையும் நபர் ஒருவர் கயிற்றால் கட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. சிறுவர்களின் கைகளை கயிற்றால் கட்டியதுடன், அவர்களின் தலையருகே சூடான நிலக்கரியை வைத்து, அதில் மிளகாயை எரித்து அதன் புகையை சுவாசிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர்கள் சத்தம் போட்டு அலறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என பந்தூர்னா மாவட்ட எஸ்.பி. சுந்தர் சிங் கனேஷ் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story