மும்பை 23-வது மாடியில் இருந்து குதித்து 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை


மும்பை 23-வது மாடியில் இருந்து குதித்து 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

மும்பையின் இந்த பகுதியில் ஒரே மாதத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும்.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் கோரேகாவன் கிழக்கு பகுதியில் ஓபராய் சதுக்கம் வளாக பகுதியில் கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் 23-வது மாடியில் இருந்து, 17 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆரே காலனி போலீசார், தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். மும்பையின் இந்த பகுதியில் ஒரே மாதத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். இதே கட்டிடத்தில் இருந்து மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story