நேஷனல் ஹெரால்டு வழக்கு: டி.கே.சிவக்குமார் ஆதரவாளருக்கு நோட்டீஸ்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: டி.கே.சிவக்குமார் ஆதரவாளருக்கு நோட்டீஸ்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டி.கே.சிவக்குமார் ஆதரவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி, அவரது மகனும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை டெல்லி போலீசார் தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே இதுபற்றி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், டெல்லி போலீசார் புதிதாக வழக்கு தொடர்ந்தது சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோருக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்தநிலையில் இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரும், காங்கிரஸ் பிரமுகருமான இனாயத் அலி என்பவருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story