காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள காமிகன்யா நகரில் வசித்து வருபவர் அபிஷேக். இவரும் அமுல்யா (வயது 23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அவர்கள் காமிகன்யா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுல்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த பேடரஹள்ளி போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அமுல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அமுல்யாவின் பெற்றோர், தங்கள் மகள் சாவுக்கு அபிஷேக் தான் காரணம் என பேடரஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story