ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்


ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்
x

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் ரெவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது.

ஏனெனில் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையுடன் அது நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்களையோ பாகிஸ்தானின் ராணுவ நிலைகளையோ குறிவைக்கவில்லை’ என தெரிவித்தார். அதேநேரம் வெறும் பயங்கரவாத நிலைகளை மட்டுமே இந்தியா அழித்ததாக கூறிய திவிவேதி, இதன் மூலம் ‘நாங்கள் உங்களைப்போல இல்லை’ என்ற செய்தி பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

1 More update

Next Story