வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாளை மறுதினம் இந்தியா வருகை


வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாளை மறுதினம் இந்தியா வருகை
x

தலைநகர் டெல்லியில் நாளை மறுதினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு நடைபெற உள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளை மறுதினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கும்படி வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மானுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் நாளை மறுதினம் இந்தியா வருகிறார். அவர் அஜித் தோவலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கிறார்.

1 More update

Next Story