ஒடிசா: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நடனம், நாடகம் உள்பட பல்வேறு கலைகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு நடன ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நடன ஆசிரியரை பணியில் இருந்து நீக்கிய கல்லூரி முதல்வர் இது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






