பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி

இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய தொகை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி
Published on

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்ற இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-20 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரில் வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. பீகாரில் 64 சதவீத மக்கள், நாள் ஒன்றுக்கு 66 ரூபாயுடன் வாழ்ந்து வருவதாக வெளியான புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. நல்லது நடக்க மாற்றம் அவசியம்.

இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய தொகை 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதுபோல், பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். அரசியல் ஆதாயத்துக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com