திருமண ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி


திருமண ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
x
தினத்தந்தி 6 July 2025 4:56 PM IST (Updated: 6 July 2025 5:21 PM IST)
t-max-icont-min-icon

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் டென்கனல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்தின்போது மணமக்கள் ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த ஊர்வலத்தின்போது வாகனத்தில் டிஜே இசை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கப்பட்டது. அப்போது, வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கி மின்சார ஒயர் மீது உரசியது. இதில், வாகனத்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் இருந்த 6 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக 6 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முந்து என்ற இளைஞர் உயிரிழந்தார். எஞ்சிய 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story