பீகார் தேர்தலில் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டி


பீகார் தேர்தலில் ஓவைசி கட்சி 100 தொகுதிகளில் போட்டி
x

பீகாரில் 100 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி அறிவித்து உள்ளது.

பாட்னா,

பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் 100 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அக்தருல் இமான் கூறுகையில், ‘பீகாரில் 100 தொகுதிகளில் போட்டியிடுவதே எங்கள் திட்டம். தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் எங்கள் இருப்பை உணர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்’ எனக்கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்விக்கு கடிதம் எழுதினேன். ஆனால் பதில் வரவில்லை. எனவே எங்கள் கால்தடங்களை விரிவுபடுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். மூன்றாவது முன்னணிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சில நாட்களில் எல்லாம் தெளிவாகிவிடும்’ என்றும் தெரிவித்தார்.

1 More update

Next Story