நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு


நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது

டெல்லி,

வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது ஆளும் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பிய பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவையு, மாநிலங்களவையில் மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

1 More update

Next Story