விமான விபத்து - வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி

விமான விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக அகமகதாபாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
"அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து செய்தியை கேட்டு வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விபத்தில் சிக்கியவர்களுடன் என் மனது உள்ளது. மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.






