விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்


விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
x

விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 204 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 204 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். இந்த நிலையில், விமான விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

1 More update

Next Story