ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு முதன்முறையாக... பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை


ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு முதன்முறையாக... பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை
x
தினத்தந்தி 12 May 2025 4:45 PM IST (Updated: 12 May 2025 4:50 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு, நாட்கள் சென்ற நிலையில் முதன்முறையாக, பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

அவர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தவித சமூக ஊடகத்திலும் இதுவரை எதுவும் பேசவில்லை. பாகிஸ்தான் தாக்குதலின்போது, அதனை எதிர்கொள்வது பற்றி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் அவர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

இதில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பின்னர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அது அதிக கவனம் பெற்றது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி, மக்களிடம் இன்று பேசுகிறார். அந்த வகையில், இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1 More update

Next Story