சோனியா காந்தி பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து

சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. இவர் 20 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும், இவர் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனினியா காந்தி இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






