கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர், இந்த ராமர் சிலையை உருவாக்கியுள்ளார்.
பனாஜி,
தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர திறந்து வைத்தார்.
குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர், இந்த ராமர் சிலையை உருவாக்கியுள்ளார். மேலும், இது உலகின் மிக உயரமான ராமர் சிலை என கோவா பொதுப்பணித்துறை மந்திரி திகம்பர் காமத் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், கவர்னர் அசோக் கஜபதி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






