காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை


காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2024 3:32 AM GMT (Updated: 2 Oct 2024 4:29 AM GMT)

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் பிரதமர் மோடியும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story